தினமணி கொண்டாட்டம்

ஐபிஎல் நடராஜனுக்கு நயன்தாரா வாழ்த்து

29th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தனது தனித்துவ பந்து வீச்சு முறையால்  நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.   இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.    

சமீபத்தில் சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடராஜன், ""ஆர். ஜே.  பாலாஜி இயக்கி உள்ள "மூக்குத்தி அம்மன்' படத்தை காண தானும் தனது குடும்பத்தினரும் ஆவலாக இருப்பதாக தெரிவிந்திருந்தார். மேலும் தனது கிராம மக்கள் ஆர்.ஜே. பாலாஜியின் ஐபிஎல் தமிழ் வர்ணனைக்கு  மிகப்பெரிய ரசிகர்கள்'' என கூறியிருந்தார்.  இந்த விடியோவை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை நயன்தாரா,  ""தாங்களும், தங்களது குடும்பத்தினரும் "மூக்குத்தி அம்மன்'  படத்தைக் காண ஆவலோடு இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த வாழ்த்துக்கு நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT