தினமணி கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர் வாங்கிய வீடு!

DIN

கும்பகோணத்தில் இருந்து இடம் பெயர்ந்த எம்.ஜி.ஆர். குடும்பம் அடையாறு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்தும் மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. தன் தாய் சத்யாதேவியின் உடல்நிலை காரணமாக, நகரத்துக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவே, அடையாறிலிருந்து லாயிட்ஸ் வீதிக்கு இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர்.

வீட்டின் வாடகை மாதம் ரூ.250. நூறு ரூபாய் கூட நிரந்தர வருவாய் இல்லாத நேரத்தில் பெரிய தொகைக்கு ஒப்புக் கொண்டனர். தாயார் படுத்த படுக்கையாக இருந்தார். நடக்கவோ சரியாகப் பேசவோ இயலாது. எந்த நேரமும் ஒரே ஒரு பிரச்னை மட்டும் எம்.ஜி.ஆர். மனதில் அலைபாய்ந்துகொண்டே இருந்தது. "ஒரு சிறு குடிலாவது சொந்தமாக வாங்க வேண்டுமே' என்பதுதான் அது. அப்பொழுது வருமானம் குறைவு என்பது மட்டுமில்லை. அந்த வருமானத்துக்கும் உத்தரவாதம் கிடையாது.

இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள், வீட்டு உரிமையாளர் எம்.ஜி.ஆரையும், அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியையும் அழைத்து ""ரெண்டு வருஷமா வாடகை கொடுக்கறீங்க. இன்னும் ஏழெட்டு வருஷம் கழிச்சு கணக்கு பண்ணினா மொத்த கிரயத்தையே வாடகையா கொடுத்திருப்பீங்க. அதை விட இப்பவே விலைக்கு வாங்கிட்டா வாடகை அவசியமிருக்காது. நல்லவங்களுக்கு வீட்டை கொடுத்தோம்ங்கிற மனநிம்மதி எனக்கும் ஏற்படும்'' என்றார்.

எம்.ஜி.ஆரும், சக்ரபாணியும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தனர். ""எப்படியாவது வாங்கிடுங்க. வேற யாருக்கும் கொடுக்கப்போறதில்லே. எத்தனை வருஷமானாலும் உங்களுக்குத்தான் அந்த வீடு'' என்றார் வீட்டின் உரிமையாளர் ஏ.வி.ராமன். பின்னர், அதே வீடு எம்.ஜி.ஆரின் சொந்த வீடானது. ஆனால், அன்னை சத்யாதேவி இறந்த போது எம்.ஜி.ஆருக்கு சொந்த வீடு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT