தினமணி கொண்டாட்டம்

தென்னிந்தியாவைக் கலக்கும் வெப்சீரிஸ்!

DIN


தற்போதுள்ள தலைமுறையினருக்கு, சமூக வலைதளம் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாகிவிட்டது.  தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதிலிருந்து, தேவையான பொருள்களை வாங்குவது வரையில் அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதில் முக்கியமான ஒன்று, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். "சுடுநீர் போடுவது எப்படி?' என்பது முதல் "தலைமுடி சிக்கலை எப்படி வலிக்காமல் எடுப்பது?' என்பது வரை காணொளிகளின் அலப்பறைகள் எண்ணிலடங்காதவை. அந்த வரிசையில் தற்போது பிரபலமாகி இருப்பது "வெப் சீரிஸ்'.

சத்யராஜ் தொடங்கி விஜய் சேதுபதி வரை   தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் வெப்சீரிஸýக்கு வருகிறார்கள். மாஸ் ஹீரோக்களுக்கு என்றே இருக்கக்கூடிய சுமை, இவர்களுக்கு வெப் சீரிஸில் கிடையாது. துணிச்சலாகப் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்க்கலாம். நமக்கும் இதுவரை திரையில் பார்க்காத சூர்யாவை,  விஜய் சேதுபதியைப் புதிய பரிமாணத்துடன் வெப்சீரிஸில் பார்த்து ரசிக்கலாம்.

அந்த விதத்தில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் உள்ள வெப் சீரிஸ்கள் பற்றி பார்வை இங்கே...

அக்ஷராவின் "ஃபிங்கர்டிப்' 

தனுஷ் நடிப்பில் வெளியான "ஷமிதாப்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர், அக்ஷராஹாசன். அதன் பின்னர் அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த "விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் "கடாரம் கொண்டான்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அக்ஷராவின் நடிப்புக்கு ஆதரவாக விமர்சனங்கள் வந்தன. தற்போது இயக்குநர் விஷ்ணு வர்தன் தயாரித்துள்ள "ஃபிங்கர்டிப்'  என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன்.

சமூக வலைதளங்களை வைத்து திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த சீரிûஸ, ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார். மேலும், அஸ்வின், சுனைனா, காய்த்ரி, மதுசுதன் போன்றவர்களும் இதில் நடிக்கின்றர்.  சீரிஸின் ட்ரெய்லர் வெளியான போதே பெரும் வரவேற்பு இருந்தது.  "இணையதள  டேட்டிங்' எனும் புதிய முறையை  வைத்து படத்தின் கதை நகர்வு என்பதால் பரபரப்பு உண்டானது.  அது மாதிரியே படமும் இருந்ததால், இளம் தலைமுறையினரின் வரவேற்பு இன்னும் அதிகமாகியுள்ளது. "ஜீ5'-இதனை வெளியிட்டது. 

பாபி சிம்ஹாவின் "வெள்ள ராஜா'

"வெள்ள ராஜா' சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் மோதல் பாணி கதை.  வெறும் கிரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. "நார்கோஸ்', "ப்ரேக்கிங் பேட்', "ஆரண்ய காண்டம்', "சேக்ரட் கேம்ஸ்', "அருவி' ஆகிய படங்களின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய "மாநகரம்' முதலானவற்றின் சாயலை மொத்தமாக "வெள்ள ராஜா'வில் பார்க்க முடிகிறது. அதிலும் பாபி சிம்ஹாவின் அந்த முக்கியமான சண்டைக்காட்சி நிச்சயம் "புதுப்பேட்டை' படத்தை நினைவுக்குக் கொண்டுவரும்.

"நெட்ப்ளிக்ஸ்' முதன்முதலில் "நார்கோஸ்' வெப் சீரிஸ் தயாரித்தபோது, உலகம் முழுவதும் அது பெரும் வரவேற்பைப் பெற்றது. பாப்லோ எஸ்கொபாரின் வாழ்க்கையை நிஜ அரசியலோடு பொருத்தி உருவாக்கப்பட்டிருந்தது அந்தத் தொடர். இந்தியாவில் ரசிகர்களைக் கவர, மீண்டும் கேங்க்ஸ்டர் வகையையே தேர்ந்தெடுத்தது "நெட்ப்ளிக்ஸ்'. அனுராக் காஷ்யப் - விக்ரமாதித்ய மோட்வானே இயக்கத்தில் வெளிவந்த "சேக்ரட் கேம்ஸ்' எதிர்பார்த்த ஹிட்டை அளித்தது. அதே பாணியில் முதல் நேரடி தமிழ் சீரிஸ் "வெள்ள ராஜா' என்ற தலைப்பில் கேங்க்ஸ்டர் கதையாக வெளியிட்டிருக்கிறது அமேசான் ப்ரைம். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதலில் மிகப்பெரிய கொகைன் நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தீ விபத்தில் இறக்கிறார்கள். எனினும், நகரம் முழுவதும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் போதைப் பொருள்களைக் குறித்து விசாரிக்கச் சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரி பார்வதி நாயர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியிட்டு, தான் பணிபுரியும் பள்ளியைப் புதுப்பித்து விடலாம் என்ற கனவோடு, தன் அக்கா குழந்தைகள் இருவரை அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் காளி வெங்கட். காப்பர் நிறுவனம் அருகில் வாழ்ந்த மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதை எதிர்த்து, அந்த நிறுவனத்துக்கு எதிராகப் போராடி வருகிறார் காயத்ரி. 

ஈரோட்டிலிருந்து சென்னை வரும் சரத் ரவி மற்றும் அவரது நண்பனுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை மாற்ற வேண்டும். இவர்களோடு இன்னும் சில கதாபாத்திரங்கள் இணையும் புள்ளியாக இருக்கிறார் பாபி சிம்ஹா. தேவா என்ற கேங்க்ஸ்டராக வரும் பாபி சிம்ஹாவின் தொழில் - கொகைன் கடத்துவது. அதற்குத் தனது "பாவா லாட்ஜை'பயன்படுத்துகிறார். லாட்ஜை விட்டு வெளியில் வந்தால் கொல்லப்படுவோம் என்று சிம்ஹாவுக்குத் தகவல் கிடைக்கிறது; எப்போதும் ஆளே வராத பழைய லாட்ஜ், அன்று திடீரென ஹவுஸ்புல் ஆக, சந்தேகத்தில் லாட்ஜில் தங்க வந்தவர்களைப் பணயக் கைதிகளாக்குகிறார் சிம்ஹா. சிம்ஹா தப்பித்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

"சவாரி' திரைப்படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த சீரிûஸ இயக்கியுள்ளார்.  

கௌதம் மேனன் தயாரித்த வெப் சீரிஸ்

கௌதம் வாசுதேவ் மேனனின் "அனாடமி ஆஃப் காமுகன்' சீரிஸ் இன்னும் பரபரப்பானது.  இதில் உலவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  வாழ்நாளில் எல்லாரும் பார்த்திருப்போம். ஒவ்வோர் ஆணுக்கும் அவனையே பார்ப்பதுபோல இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ரொம்பப் பரிச்சயமான ஆண் நபரைப் பார்ப்பதுபோல உணரவைக்கும்.

கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் வர்ணிக்கப்படும் கதாபாத்திரங்கள் யாவும் நுனி நாக்கில் ஆங்கிலம் தவழும்படி இருந்தாலும்,  படத் தலைப்புகளை தமிழால் நிறைத்தவர்.  இனி மலையாள அகராதியையும் புரட்டச் செய்யப்போகிறார். "அனாடமி  ஆஃப் எ காமுகன்' எனும் வெப் சீரிஸ் மூலம், மலையாளத்திலும் தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் கௌதம் மேனன். 

தி ஃபேமி− மேன்

ஓடிடி  தளங்களில் தற்போது முக்கிய இடத்தில் இருக்கும் அமேசான் ப்ரைமில் ஆக்ஷன் - டிராமா பாணியில் வெளிவந்த வெப் சீரிஸ், "தி ஃபேமிலிமேன்'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிûஸ, பாலிவுட் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கியிருக்கின்றனர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரவ் மனோஜ் போன்ற பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த சீரியஸýக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் தொடுக்கத் திட்டமிடும் ஐ.எஸ் அமைப்பின் திட்டத்தை, என்.ஐ.ஏ நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியான காந்த் திவாரி  எப்படித் தகர்த்து, அதை முறியடிக்கிறார் என்பதே கதையின் ஒன் லைன்.

மும்பையைப் போன்றதோர் பெரு நகரத்தில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய வேலையில் காட்டும் ஆர்வத்தைக் குடும்பத்தில் காட்ட நேரமின்றி வேலையே கதியென்று இயங்கிக்கொண்டிருப்பவர். 

ஒரே மாதிரியான வேலைகளைப் பார்த்து சலித்துப்போய், குழந்தைகளையும் சமாளித்து, வீட்டையும் சமாளிக்கும் குடும்பத் தலைவியாக பிரியாமணி. இந்த இறுக்கத்தினாலே இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, அதனால் ஏற்படும் இடைவெளி, இந்தப் பாதிப்பால் குழந்தைகள் திசைமாறுவது என வீட்டுப் பிரச்னைகளையும் பேசியிருக்கிறது "தி ஃபேமிலிமேன்'. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT