தினமணி கொண்டாட்டம்

ஒரு நடிகனின் கதை!

22nd Nov 2020 06:00 AM | -ஜி.அ.

ADVERTISEMENT


திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த போது ஆனந்த விகடன் இதழில் நாகேஷ் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். "வெள்ளிக் கோப்பை' என்பது தலைப்பு.

"இரண்டு நண்பர்கள் (நாடகக் கலைஞர்கள்) சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் சினிமா வாய்ப்பு வருகிறது. அவன் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போது, மற்றொருவன் அவனது தயக்கத்தைப் போக்கி துணிச்சலாக ஏற்றுக் கொள்ள வைக்கிறான்.

நாள்கள் ஓடுகின்றன. சினிமாவுக்குப் போன நண்பன் பெரியாளாகி விடுகிறான். நீண்ட நாளைக்குப் பிறகு நண்பனைப் பார்க்க வந்த ஏழை நண்பன் உரிமையுடன் அவன் சட்டையை எடுத்துப் போடுகிறான். அதை வீட்டு வேலைக்காரன் தடுக்கிறான். நண்பனிடம் வேலைக்காரனின் செயலைக் கண்டிக்கச் சொல்லி கேட்கிறான் ஏழை நண்பன். ஆனால் வேலைக்காரனின் செயலை சரி என்கிறான் நடிக நண்பன். கோபித்துக் கொண்டு புறப்படுகிறான் ஏழை.

பின்னால் ஓடி வரும் நண்பன் தனக்கிருக்கும் தோல் நோய் பற்றி விளக்குகிறான். நண்பனைக் கட்டிக் கொண்டு ஏழை நண்பன் அழுவதோடு கதை முடிகிறது'.

ADVERTISEMENT

நாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்ட இந்தக் கதை அன்று சிறப்பாக பேசப்பட்டது. இதில் நாம் நடிக நண்பனாக நாகேஷைத்தான் நினைத்துக் கொள்வோம். உண்மையில் அந்த ஏழை நண்பன்தான் அவர்!

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT