தினமணி கொண்டாட்டம்

மலை ரயில்வே

1st Nov 2020 07:23 PM | விஷ்ணு

ADVERTISEMENT

 

டார்ஜீலிங் மலை ரயில் பாதை (1879-1881)-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது முதலில் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும், 2-ஆம் உலகப்போரின் போது ஆயுதங்களுடன் சிப்பாய்களும் இந்த ரயிலில் பயணம் செய்து வந்தனர். அதன் பின்னர்தான் இந்த அழகிய ரயில்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் பயணிக்கிறது. அதோடு குட்டி குட்டி பெட்டிகளை பழமையான நீராவி இஞ்சின் இழுத்துச் செல்ல இறுதியில் 86 கி. மீ பயணம் செய்து டார்ஜீலிங்கை அடைகிறது. 

நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி இஞ்சினும், பின்னர் டீசல் இஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். இந்த ரயில் 208 வளைவுகள், 16 குகைகள் மற்றும் 250 பாலங்களை கடந்து செல்வதால் பயணதூரம் 46 கி.மீ.தான் என்றாலும் பயண நேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். 

பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. அதாவது ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக தங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். அதோடு ராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903-ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT