தினமணி கொண்டாட்டம்

செல்லிடப்பேசியில் எடுக்கப்பட்ட சினிமா!

1st Nov 2020 07:38 PM

ADVERTISEMENT

 

ஓடிடி மூலம் உள்ளங்கையில் சினிமா  வந்து விட்டது. இப்போது அதே சினிமா செல்லிடப்பேசி காமிரா மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளது. இப்படியொரு ஆச்சரிய சினிமா எடுத்துக் காட்டியிருக்கிறார்  சந்தோஷ் நம்பிராஜன்.

ழியனின் "டூ லெட்' படம் மூலம் அறிமுகமான சந்தோஷ் நம்பிராஜன் செல்லிடப்பேசி மூலமாகவே முழுப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.  "அகண்டன்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளில்   படமாக்கப்பட்டுள்ளது. 

செல்லிடப்பேசியில் எடுத்தாலும் இப்படம் திரையில் பார்க்கக் கூடிய விதத்தில், மிகப்பெரிய மெனக்கெடலோடு படமாக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சந்தோஷ் நம்பிராஜன் பேசும் போது... "" ஐபோன் 11 புரோ செல்லிடப்பேசி இதற்குப் பயன்படுத்தினோம். போனில் படம் பார்ப்பதற்கு அடுத்து செல்லிடப்பேசி படமாக்கும் தொழில்நுட்பம் சினிமாவில் மிகப் பெரிய ஒரு புரட்சியை உருவாக்கும். அனைவருக்கும் சினிமா என்பது கனவு, அந்த கனவை நிறைவேற்றும் வகையில் சினிமாவை எளிமையான முறையில் எடுப்பதற்கான புதிய வழியை காட்ட வேண்டும், என்ற என் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. செல்லிடப்பேசி, கதையும் இருந்தால் போதும் அனைவராலும் படம் எடுக்க முடியும்  என்பதை நிரூபித்திருக்கிறோம். சாலையோரங்களில் இரவு சாப்பாட்டுக் கடை வைத்திருக்கும் ஒருவனுக்கு ஒரு கனவு இருக்கிறது. ஒரு கட்டடத்தில் வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டும். அதற்கு முதலாளியாக தன்  மனைவியை அமர வைத்து பார்க்க வேண்டும் என்பது அந்தக் கனவு. அந்தக் கனவில் இடியாக வந்து விழுகிறது ஒரு கொலை வழக்கு. அந்தக் கொலை வழக்கில் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற சிங்கப்பூர் சென்றாக வேண்டும் என்ற கட்டாய சூழல், தெரியாத மொழி, தெரியாத நாடு, ஆனால் தன் காதல் மனைவிக்காகப் பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்புவதுதான் திரைக்கதை. விரைவில் படம் வெளியாகும்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT