தினமணி கொண்டாட்டம்

தோற்பது கண்ணியமானது!

10th May 2020 08:00 PM | -த.நாகராஜன், சிவகாசி

ADVERTISEMENT


அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம்லிங்கன் தன் மகனுக்கு என்ன கற்பிக்க வேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்:

யாரும் முற்றிலும் நேர்மையானவர் கிடையாது. உண்மையானவர்களும் கிடையாது. இதை அவனுக்குச் சொல்லுங்கள்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.

பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

ADVERTISEMENT

மனம் விட்டுச் சிரிக்கும் ரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.

வெட்டிப் பேச்சுக்கு அடிமையாவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.

இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விடத் தோற்பது கண்ணியமானது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.

எத்தனைபேர் கூடி தவறு என்று சொன்னாலும், சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.

துன்பப்படும் போது அவன் சிரிக்கட்டும். அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். இனிமையாகப் பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் சொல்லிக் கொடுங்கள்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதைத் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனை  பழக்குங்கள்.

எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

இவையெல்லாம் மிகப் பெரிய கடினமான நடைமுறைகள் தான். ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்!

ADVERTISEMENT
ADVERTISEMENT