தினமணி கொண்டாட்டம்

கரோனா கிருமியின் ஆயுள்!

10th May 2020 08:24 PM | -கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டுக்குள் இருப்பதால் அழகு சாதனப் பொருள்கள் விற்பனை அதிக அளவில் குறைந்துள்ளது. இதனை ஈடு கட்டும் விதமாக எல்லா வித கிருமிநாசினிகளின் விற்பனையும்  கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் கரோனா  வைரஸ்  எங்கும் எதிலும் இருப்பதுதான். அதனால்தான் கை கழுவும் போது கூட  கையால் குழாயைத்   திறக்காமல், கை நீட்டினால் தண்ணீர் வரும் குழாய்களுக்கு தேவை கூடியுள்ளது.

பொது இடங்களில் கால் கொண்டு  பெடலை அழுத்தினால் குழாயிலிருந்து   தண்ணீர் வரும்படி கருவிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

கரோனா வைரஸ்ஸின் சரியான பெயர், கோவிட்-19.  அதை சார்ஸ்-கரோனா வைரஸ்-2 (Sars CoV 2) என்றும் குறிப்பிடுகிறார்கள். தூணிலும் துரும்பிலும் காற்றிலும் கலந்திருக்கும் கரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் தத்தளிக்கிறது.  

எதைத் தொட்டாலும் சோப்பு  அல்லது சானிடைசர் கொண்டு  கைகளை சுத்தமாக்கிக்கொள்ளுங்கள்  என்று சொல்வது,  கரோனாவின்  வீரியம் அந்த அளவுக்கு இருக்கிறது என்பதினால்தான். 

ADVERTISEMENT

கரோனா கிருமியின்  வாழ்நாள் எத்தனை என்று தெரிந்து கொண்டால் கரோனா குறித்த விழிப்புணர்வு  வரும். 

பொதுவாக  கரோனா பாதிக்கப்பட்டவர் இருமினால் அல்லது தும்மினால் வெளிவரும் நீர்த்திவலைகள் மூலமாக  கரோனா நுண் கிருமிகள் காற்றில் 
கலக்கும். 

அதைத் தடுக்கத்தான்  இருமும் போதும் தும்மும் போதும் துவாலை கொண்டு வாயையும் மூக்கையும் போத்திக் கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறார்கள். தும்மும் போதும் இருமும் போதும்  வெளிப்படும் நீர்த்திவலைகள் மிக மிக நுண்மையானது. கண்ணால் பார்க்க முடியாது. 

அதனால் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் கை கால்களை  சோப்  போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். கை கால் கழுவிய பின் கழிப்பறையின் சுவரையோ   குழாயையோ தொடக்க கூடாது. கழிப்பறையையும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குளிர் பகுதிகளில் கரோனா 28 நாட்கள் வரை  உயிருடன்  இருக்குமாம். அதனால்தான் கரோனா நோயாளிகளை 14 நாட்கள், 28 நாட்கள்  தனிமைப்படுத்தி   கண்காணிக்கிறார்கள். 

கைகளை கை விரல்களை சுத்தம் செய்யாமல்  முகத்தையும் கண்கள் மூக்கு வாய் இவற்றைத் தொடக்கூடாது.  அப்படி தொட்டால் கரோனா மூக்கு வாய் வழியாக  உடலினுள் செல்ல வாய்ப்புள்ளது. அதனால்தான்  அவ்வப்போது கைகளை சோப்பை போட்டு குறைந்தது 20  நொடி நேரம்  நன்றாகத் தேய்த்து கழுவ வேண்டும்  என்று சொல்கிறார்கள். 

கண்ணாடி, பிளாஸ்டிக், உலோகப் பொருள்களில்  அமர்ந்தால் ஒன்பது நாட்கள் வரை உயிருடன் இருக்கும் கரோனா கிருமிகள், தாமிரத்தால் செய்யப்பட பொருள்களில் நான்கு நாட்கள் வரைதான்  உயிருடன் இருக்குமாம். அதனால் கிருமிநாசினியில் நனைக்கப்பட்ட துணி கொண்டு வீட்டில் இருக்கும் எல்லா பொருள்களையும் துடைக்க வேண்டும். 

துணி திரைகள், விரிப்புகள், அணியும் ஆடைகளில் அமரும் கரோனா கிருமிகள் ஆயுள் எத்தனை நாட்கள்.. என்று இதுவரை கணிக்க முடியவில்லை. நம்மைச் சுற்றியிருக்கும்  காற்றில் உள்ள  ஈரப்பதம், வெப்பநிலைகளில் ஏற்படும் மாற்றம் கரோனா கிருமியின் வாழ்நாளை, கூட்டும் குறைக்கும்.

சோப்பு, தரமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தினால் கரோனா கிருமிகளின்  ஆயுளை ஒரு நிமிடத்திற்குள் இல்லாமல் செய்துவிடலாம்..! ஆதலினால், கரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்.. எச்சரிக்கையாக இருந்தாலே போதும்.. கரோனாவை  விரட்டிவிடலாம்..!

ADVERTISEMENT
ADVERTISEMENT