தினமணி கொண்டாட்டம்

புதிய முயற்சி!

22nd Mar 2020 04:16 PM

ADVERTISEMENT

"காட்டுப்பய சார் இந்த காளி', "மத்திய சென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெய்வந்த். இவர் அடுத்து நடித்து வரும் படம் "அசால்ட் - பால்ட்'. சரவணன், சென்ராயன், ராமர், கோதண்டம், சோனா, தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூபதி ராஜா எழுதி இயக்குகிறார்.
 படம் குறித்து ஜெய்வந்த் பேசும் போது.... "இதுவரை இந்திய சினிமாவிலேயே இல்லாத விதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். புது முயற்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். படம் பார்க்கும் போது ,அதை கண்டிப்பாக உணருவீர்கள். இதன் முதல் பார்வையை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளியாகவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT