தினமணி கொண்டாட்டம்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு 

8th Mar 2020 08:12 PM

ADVERTISEMENT

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "நானி'. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு "சிவகாமி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. மணீஷ் ஆர்யா, பிரியங்கா ராவ், சுஹாசினி,ஜெகதீஷ், கல்பனா நடிக்கின்றனர். ராகவேந்திரா எழுதி இயக்குகிறார். மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் மீண்டும் அதே பாணிப் படமாக இது உருவாகி வருகிறது. ஆவி, பேய்களை அடக்கும் அம்மன் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. மொழி மாற்றம் செய்து தமிழில் தயாரிக்கிறார் ஜே. எம். பஷீர். 

இது குறித்து அவர் பேசும் போது....  ""என் நண்பன் செளத்ரியை சந்தித்த போது இந்தப் படம் குறித்து பேசினார். தென்னிந்திய கலாசார அடிப்படையில் எல்லா மொழிகளுக்கும் இந்தக் கதை பொருந்தி வரும் என ஆலோசனை தந்தார். அவரின் ஆலோசனை படியே இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிக்க முன் வந்தேன். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பேசும் படமாக இதன் கதைக் கரு அமைந்துள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில் இது விழிப்புணர்வு படமாகவும் இருக்கும். இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது'' என்றார் பஷீர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT