தினமணி கொண்டாட்டம்

உள்ளூர் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டும்

21st Jun 2020 05:44 PM | -ராஜன்

ADVERTISEMENT


கரோனாவால்,  கடந்த 80  ஆண்டுகளில் நினைத்துக்கூட பார்த்திராத வகையில், தற்போது சர்வதேச அளவில் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் மீண்டும் விளையாடப்பட்டாலும், சகஜநிலைக்கு வீரர்கள் வருவது மிகவும் சவாலான விஷயம். முதலில் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டிகளை வடிவமைக்க வேண்டும். பிறகு படிப்படியாக வெளிநாட்டு போட்டிகளை முடிவு செய்யலாம். அனைத்து நாடுகளுமே மொத்தத்தில் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், உள்ளூர் போட்டிகளில் முதலில் கவனம் செலுத்துவதே சரியாக இருக்கும்.

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் விளையாடப்பட்டாலும், தங்களை மீட்டு நிலைநிறுத்திக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படும். அது எவ்வளவு பெரிய வீரரானாலும் இது ஒரு தொடர் கண்காணிப்பில் வீரர்கள் முதலில் தனியாக வீரர்கள் பயிற்சி எடுக்கலாம். பின்பு, முகாம்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்படலாம். இவையெல்லாம் ஊரடங்கிற்குப் பிறகு அரசு மற்றும் பிசிசிஐ அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்.

ஊரடங்கிற்குப் பின்பு பி.சி.சி.ஐ உள்ளிட்ட உலகின் அனைத்து போர்டுகளும் உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

ADVERTISEMENT

ஐ.பி.எல்லை கையாள்வது எளிது.  உள்ளூர் போட்டிகளிலும் முதலில் ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார். 

""தற்போது வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கரோனாவை அடுத்து பயிற்சிகளில் பங்கேற்கும்போது, நான் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்'' என்கிறார் ரவி சாஸ்திரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT