தினமணி கொண்டாட்டம்

கரோனா குமார்

21st Jun 2020 05:59 PM

ADVERTISEMENT

 

கரோனா கால சூழல், விபரீதங்கள், அச்சம், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கரோனா குமார் என்ற பெயரில் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கோகுல். "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், இந்தக் கதையைத் தனது அடுத்தப் படமாக உருவாக்க இருக்கிறார்.

கரோனா பொது முடக்கத்தில் ஏற்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக உள்ளது. தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹெலன்' தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

கோகுலின் அடுத்தப் படமாக "கரோனா குமார்' உருவாகவுள்ளது. "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, பொதுமுடக்கம் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரஸ்யங்களை நகைச்சுவையாக சொல்லுவதே கதை.

ADVERTISEMENT

வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்தக் கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது. அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்பதை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை எழுதியுள்ளதாகத் தெரிவித்தார் கோகுல். சினிமாவாலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே. சதீஷ் தயாரிக்கிறார். நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT