தினமணி கொண்டாட்டம்

இயக்குநரான கார்ட்டூனிஸ்ட்

14th Jun 2020 04:50 PM | -அ.குமார்

ADVERTISEMENT

1927-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அஜ்மீரில் பிறந்த பாசு சாட்டர்ஜி, அண்மையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் தனது 93-ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

திரையுலகில் வருவதற்கு முன் "பிளிட்ஸ்' பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக பணியாற்றிய இவர், ராஜ்கபூர் நடித்த "கீஸ்ரி காஸம்' படத்தின் உதவி இயக்குநராக சினிமாவில் நுழைந்தார். இவர் இயக்கிய முதல் படமான "சாரா ஆகாஷ்' 1969-ஆம் ஆண்டு வெளியான போது இந்தி சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய படமாக கருதப்பட்டது. தொடர்ந்து இவர் இயக்கிய படங்களில் "பியா கா கர்' (1972) ரஜினிகந்தா (1974), சோட்டி கி பாத் (1975), கட்டா மீட்டா (1978) "சிட் சோர்' (1976) "சங்கீன்' (1982) "கம்லா கி மவுத்' (1989) போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். சில பெங்காலி படங்களையும் இயக்கி இவர், தூர்தர்ஷனுக்காக "பையோம் பக்ஷி"  மற்றும் "ரஜினி' போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பாத்திரங்களை வைத்தே படங்களை இயக்கிய இவர், மிதுன் சக்கரவர்த்தி, ஜிஜேந்திரா, அமிதாப்பச்சன், ராஜேஷ் கன்னா போன்ற பிரபலங்களை வைத்தும் படங்களை இயக்கியுள்ளார்.  ஜார்ஜ் பெர்னாட்ஷா எழுதிய "பிக்மாலியன்' கதையை அடிப்படையாக வைத்து தேவ் ஆனந்த் நடிப்பில் "மன் பசந்த்' என்ற படத்தை இயக்கியவர், சொந்தமாகவும் சில படங்களை தயாரித்துள்ளார். வர்த்தக சினிமாவுக்கு இணையான கலைப்படங்களையும் இயக்கியவர் என்ற பெருமையை பெற்ற பாசு சாட்டர்ஜியின் மறைவு இந்தி திரைப்பட வுலகில் பெரும் இழப்பாக கருதப்
படுகிறது. 

Tags : சாட்டர்ஜி கார்ட்டூனிஸ்ட் பிளிட்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT