தினமணி கொண்டாட்டம்

1934 - 2019:     தினமணியும் நானும் 

14th Jun 2020 04:55 PM | -எழுத்தாளர் சு.இலக்குமணசுவாமி

ADVERTISEMENT

தினமணி காலத்தின் பெட்டகம்

எனது தந்தையார் ராணுவத்தில் பணியாற்றியவர். நான் பிறந்த ஏழாவது வயதிலேயே தினமணி இதழைப் பற்றி விவரமாய் எடுத்துக்கூறியவர் தந்தைதான். 

எனக்குத் தெரிந்து ஆசிரியர் ஏ.என்.சிவராமன் காலத்திலேயே எங்கள் வீட்டில் தினமணி இதழ் தவழ்த்திருந்தது.

நான் 47 ஆண்டுகளாக வாசகன் மட்டுமல்ல. என்னை எழுத்தாளராகவும் மாற்றிய பெருமை தினமணிக்கு உண்டு. 

ADVERTISEMENT

இன்றளவும் தினமணி சிறுவர் மணியில் குழந்தைப் பாடல் துணுக்குகள், தினமணி கதிரில் "பேல் பூரி' பகுதியில், தினமணி கொண்டாட்டம் போன்ற இணைப்புகளில் என் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
தமிழ்மணியில் தரமான இலக்கியங்களும், கட்டுரைகளும் மலரோடு சேர்ந்த மணம் பெறுகிறது. 

இளைஞர்மணி, இளைஞர்களுக்காக எதிர்கால வாழ்வை  காட்டுவதில் நல்வழி காட்டியாக திகழ்கின்றது.

மகளிர் மணி மூலம் மகளிர் பலரின் திறமைகள் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

தினமணி காலத்தின் பெட்டகம்.  அதில் என்னுடைய படைப்புகள் தினமணியில் இடம் பெறுவது குறித்து பெருமையும் பெருமிதமும் கொள்கின்றேன். 

 

செய்திகள் முற்றிலும் உண்மையானவை


நான் பத்து வயதிலிருந்து கிட்டதட்ட 60 ஆண்டுகளாக தினமணி வாசகனாக இருந்து வருகின்றேன் . 18 வயதில் நூலகராக பணியில் சேர்ந்து 42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நான் பணிபுரிந்த நூலகங்களில் பெரும்பாலும் வாசகர்கள் அதிகமாக படிப்பது தினமணி தான். காரணம் அதில் வரும் செய்திகள் முற்றிலும் உண்மையானவை. 

சிறுவர் மணி- பேரன் பேத்திகளுக்கு, மருமகளுக்கு- மகளிர் மணி, இளைஞர்களுக்கு -இளைஞர் மணி, ஞாயிறு வெளியாகும் கொண்டாட்டத்தில் விரசமில்லாத சினிமா செய்திகள், வெள்ளி அன்று ஆன்மிகம் என இணைப்பு இதழ்கள் அனைத்திலும் புதுமையாக உள்ளன. 

-முத்துபாஸ்கரன் ஒய்வு பெற்ற நூலகர், புதுவை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT