தினமணி கொண்டாட்டம்

சின்னத் திரையில்  ரஞ்சித்

14th Jun 2020 05:09 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு சுமார் 50 நாட்களுக்கு மேல் தடைப்பட்டு இருந்தது. இதனால் சீரியல்கள் இல்லாமல், பழைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்புத் தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சீரியல் படப்பிடிப்புத் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி வருகின்றன. முன்னணித் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி, இந்த வாரம் முதல் சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "வரும் வாரம் முதல் விஜய் டிவியின் "பாண்டியன் ஸ்டோர்ஸ்', "பாரதி கண்ணம்மா', "காற்றின் மொழி', "ஆயுத எழுத்து', "நாம் இருவர் நமக்கு இருவர்', "தேன்மொழி' ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய தொகுப்புகளும் ஒளிபரப்பாகும்.

நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "செந்தூரப் பூவே' என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பையும் தொடங்குகிறது விஜய் டிவி. இரவு 9 மணிக்கு இந்த மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இது காதல் நிறைந்த குடும்ப சீரியலாகும். இதில்  நடிகர் ரஞ்சித்  நடித்துள்ளார்.  இவர் முதன்முதலாக நடிக்கிற தொடர் இது. இவர் "பாண்டவர் பூமி', "நேசம் புதுசு', "பீஷ்மர்' உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT