தினமணி கொண்டாட்டம்

அமேசானின் அடுத்த வெளியீடு

14th Jun 2020 05:12 PM

ADVERTISEMENT


பொதுமுடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் மாற்றுத் தேவையாக இணைய திரைகள் முளைத்துள்ளன. இந்த வகையில் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களை வாங்கி வெளியீடு செய்கிறது. சமீபத்தில் ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்' படத்தை வெளியிட்டது.

அடுத்த வெளியீடாக "பெண்குயின்" படம் வருகிறது. கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது.  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்  பெஞ்ச் ஃபிலிம்ஸ்  மற்றும்  பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. கடந்த 8-ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வரும் 19-ஆம் தேதி இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு,  மலையாளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT