தினமணி கொண்டாட்டம்

தினமணியும் நானும்: 1934 - 2019

7th Jun 2020 04:17 PM

ADVERTISEMENT

 

உற்ற நண்பன் "தினமணி'!

அறுபது வயதை கடந்திருக்கும் எனக்கு தினமணியுடன் பந்தம் ஏறக்குறைய 38 ஆண்டுகள். நான் திருவண்ணாமலை மாவட்டம். 

அப்போதைய வட ஆற்காடு மாவட்டம். செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவனாக இருந்த போது எங்கள் விடுதிக்கு வந்த ஒரே நாளிதழ். செய்திகளில் உண்மைத்தன்மை, நடுநிலை ஆகியவற்றால் கவரப்பட்ட நான் தினமணி படிக்காத நாட்கள் மிக அரிது.

ADVERTISEMENT

3.5.2004-ஆம் ஆண்டு "இந்தியா ஒளிரும்' எனது கட்டுரையை வெளியிட்ட தினமணி மூலம் என்னாலும் பத்திரிகைகளில் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றதோடு தொடர்ந்து தினமணியில் கட்டுரைகள் எழுதினேன். அக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை "இந்தியா ஒளிரும்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். 

அஞ்சல்துறையில் பணியாற்றிய நான் பணி நிமித்தமாக தில்லி, மும்பை என குடும்பத்தைப் பிரிந்து சென்று பணியாற்றிபோது எனக்கு உற்ற நண்பனாக இருந்தது தினமணி! ஞாயிறுதோறு தினமணியில் வெளியாகும் தமிழ்மணி என் போன்ற தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு வாரந்தோறும் கிடைக்கும் பொற்கிழி புதையல் என்றே சொல்ல வேண்டும்.

-இரா. சாந்தகுமார், கூடுவாஞ்சேரி

 

பத்திரிகை வரலாற்றின் ஆணிவேர்


தினமணி வீட்டு மேசையில் இருப்பது கௌரவம்; கையில் இருப்பது கௌரவம்; அதில் படைப்புகள் வருவது சமுதாயத்தில் படைப்பாளிக்கு ஒரு பெரிய கௌரவம்.

நான் பல ஆண்டுகளாகவே தினமணியில் வெளியாகும் கட்டுரைகள், முக்கியச் செய்திகள், இணைப்பிதழ்களில் வெளியாகும் சிறுகதைகள், சிறுவர் நாடகங்கள் போன்ற பிறவற்றையும் சேகரித்து அவற்றைப் பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன். இனி வரும் இளைய தலைமுறையினருக்கு அவை பயன்
படட்டும் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பத்திரிகை வரலாற்றின் ஆணிவேர் தினமணிதான் என்பதை யாரும் மறுந்துவிட முடியாது; மறைத்துவிடவும் முடியாது.

தினமணி வெளியிட்டுள்ள மருத்துவ மலர்களையெல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். சுவைகளை ஆழமாக ஊன்றிப் படிப்பது எனது மருத்துவ இதழுக்குப் பேருதவியாக உள்ளது.

எந்த இலக்கிய அமைப்பு சிறுகதைப் போட்டிகள் நடத்தினாலும் அந்த அறிவிப்பினை சில மாதங்களுக்கு முன்பே முறைப்படி வெளியிட்டு, பரிசு கதைகளையும் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளையும், வரிசையாக வெளியிட்டு எழுத்தாளர்களை உருவாக்கும் பணியினை மிகச் சிறப்புடன் செய்து வருகிறது தினமணி.

சனி,ஞாயிறு என்றாலே அதிகாலை ஐந்து மணியிலிருந்தே ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்து விடுவேன். ;  அதன் இணைப்பு மலர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். மிகவும் பொறுப்புடன் தயாரிக்கப்படும் தங்கத் தாள்கள் அவை.

-செருவை க.நாகராசன், புதுக்கோட்டை
 

ADVERTISEMENT
ADVERTISEMENT