தினமணி கொண்டாட்டம்

சாத்தானின் சாலை

25th Feb 2020 01:07 PM

ADVERTISEMENT

போதையின் தீமைகளைக் கருவாகக்கொண்டு உருவாகி வரும் படம் "மரிஜுவானா'. அட்டு ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம், சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் எம்.டி.ஆனந்த்.
 படம் குறித்து இயக்குநர் பேசுகையில்.... "மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். ஆனால் படத்தில் கஞ்சா எந்தக் காட்சியிலும் இடம் பெறாது. இலையையும் சாணத்தையும் வைத்துதான் காட்சிப்படுத்தினோம். ஒருவன் போதை பழக்கத்தில் இறங்குவதால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பது பலரின் எண்ணம். தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுகிறார்கள். ஆனால், போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாத்தானின் சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகிறது...? இது போன்ற பல கேள்விகளைப் போதை பின்னணி கதையாக உருவாக்கி இருக்கிறேன். இளைஞர்களுக்கான படமாக மட்டுமில்லாமல், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வும் இதில் இருப்பதுதான் விசேஷம்'' என்றார்.
 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT