தினமணி கொண்டாட்டம்

மீண்டும் ஒரு மரியாதை

2nd Feb 2020 10:05 PM

ADVERTISEMENT

பாரதிராஜா தயாரித்து, நடித்து, இயக்கி வரும் படம் "மீண்டும் ஒரு மரியாதை'. ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோமல்லூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெளிநாட்டில் வயதான ஆணும், இளம் பெண்ணும் தங்களுடைய நட்பின் மூலம் ஏற்பட்ட பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பது படத்தின் கதை. தற்கொலைக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்யும் விதமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 21-ஆம் தேதி படம் வெளியாகிறது. ஒளிப்பதிவு - சாலை சகாதேவன். பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்.ஆர். ரகுநந்தன். பின்னணி இசை - சபேஷ்-முரளி. பாடல்கள் - வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன்.

வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT