தினமணி கொண்டாட்டம்

தயாராகும் ரஜினி

6th Dec 2020 06:00 AM

ADVERTISEMENT

 

ரஜினிகாந்தின் "அண்ணாத்த' படப்பிடிப்பு கரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஹைதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் பொது முடக்கத்தைத்  தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர்.   நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, ஹிந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளைத்  தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது.

இந்த மாத கடைசியில்  படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர்.  படப்பிடிப்பு முடிந்து  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ்  உள்ளிட்டோர்  நடிக்கின்றனர். சிவா படத்தை இயக்குகிறார்.  

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT