தினமணி கொண்டாட்டம்

மீண்டும் சினிமாவில்...

6th Dec 2020 06:00 AM

ADVERTISEMENT


தொடக்கத்தில் சினிமாவில் பரபரப்பாக சுழன்று வந்தவர் சஞ்சீவ். "குளிர் 100 டிகிரி', "குறும்புக்கார பசங்க', "தோழி', "சகாக்கள்', "இங்கிலீஷ் படம்' என தொடர்ந்து நடித்து வந்தவருக்கு சின்னத்திரையில் பளீச் வெளிச்சம் கிடைத்தது. "ராஜா ராணி', இப்போது "காற்றின் மொழி' உள்ளிட்ட தொடர்கள் மூலம் தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார்.  சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்குத்  திரும்பியுள்ளார். இவர் நடிப்பில் தற்போது அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள "13-ஆம் நம்பர் வீடு' பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

""சினிமா ஒரு ஜனநாயகக் கலை. அதன் மீது எந்த குறையும் சொல்லக் கூடாது. நல்ல கதைகளுக்கு எப்போதுமே ரசிகனின் ஆதரவு உண்டு. ஒரு கதை என்பது எல்லாமே சேர்ந்தது. உணர்ச்சிகரமாகவும், மனசை உலுக்கவும், அதே நேரத்தில் மனித உணர்வுகளைத் தேடித் தருகிற படமாகவும் இந்தப் படம் வந்ததில் மகிழ்ச்சி. விற்பனை, வெற்றி என்பதை தாண்டி ஒரு நிறைவான படைப்பாக வந்துள்ளது. அதை திரைக்கதையில் சுருக்கி சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் விவே. கதிரேசன். கதையைச் சொல்லும் போதே நிறைய எமோஷன் வந்தது. அடுத்து ஒரு படம் இதே இயக்குநருடன் இணைகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சினிமா, சின்னத்திரை என எல்லாவற்றிலும் தொடர்ந்து பயணிக்கிறேன்'' என்றார் சஞ்சீவ்.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT