தினமணி கொண்டாட்டம்

நேதாஜி கருத்தை பகிர்ந்த ஓவியா!

23rd Aug 2020 06:00 AM

ADVERTISEMENT


"பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும், போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் "சுதந்திரம்' குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது' என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT