அண்ணா முதல் அமைச்சராக இருந்தபொழுது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உடல் நலத்தைப் பற்றி கவலை அடைந்த டாக்டர்கள், அவரை எந்த நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்று கூறி இருந்தார்கள்.
டாக்டர்களுடைய சொல்லையும் மீறி, அண்ணா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசுகையில், "என்னுடைய தாய்த்திருநாட்டிற்கு, "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டும் இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், அந்த உயிர் இருந்து என்ன பயன்' என்று குறிப்பிட்டார்.