தினமணி கொண்டாட்டம்

வெற்றியின் ரகசியம்

26th Apr 2020 06:32 PM | -மயிலை மாதவன்

ADVERTISEMENT


மாவீரன் நெப்போலியன் தனது வெற்றியின் ரகசியமாகக் கூறுவது என்ன தெரியுமா? 

""நான் செய்ய வேண்டிய வேலைகளை எனது மூளையில் புறாக் கூண்டு அறைகளைப் போல் பல அறைகளில் பிரித்து வைத்துக்கொள்வேன். ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றால் அந்த வேலைக்கான கூண்டை மட்டும் திறந்து என் பணியைச் செய்வேன். அந்த நேரத்தில் வேறு வேலைகளைப் பற்றி சிந்திக்கமாட்டேன். வேறொரு வேலையை நான் செய்ய விரும்பினால் அதற்குரிய கூண்டை மட்டும் திறந்துவிட்டு மற்றதையெல்லாம் மூடி வைப்பேன். தூக்கம் வந்தால் மூளையின் எல்லாக் கூண்டையும் மூடிவிட்டு நிம்மதியாய் தூங்குவேன். எந்த வேலை செய்தாலும், அதே வேலையில் மட்டுமே என் கவனம் இருப்பதால் என்னால் எளிதில் வெற்றி பெற முடிகிறது'' என்றார் நெப்போலியன். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT