தினமணி கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் படத்துக்கு தடை

26th Apr 2020 06:36 PM

ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் "ஹீரோ'. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குநர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த "ஹீரோ' படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த படத்தின் கதை "ஹீரோ' படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குநர் பி.எஸ். மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே "ஹீரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விட்டது. தற்போது இந்த படம் ஒரு முன்னணி தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குநர் பி.எஸ் .மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓ. டி. டி தளங்களில் இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT