தினமணி கொண்டாட்டம்

சுட்டுரைப் பக்கத்தில் மஞ்சிமாமோகன் வேண்டுகோள்

5th Apr 2020 06:06 PM

ADVERTISEMENT

நடிகை மஞ்சிமா மோகன்  தனது சுட்டுரைப் பக்கத்தில், ""மக்களுக்கு வீட்டில் இருப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.

மஞ்சிமாவின் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர், ""மஞ்சிமாவின் உருவம் குறித்து அநாகரிகமான முறையில்  நீயா எங்களுக்கு உணவளிப்பாய்?'' என்று கேட்டிருந்தார். அந்த ரசிகருக்கு தனது மற்றொரு பதிவில் மஞ்சிமா பதிலடி கொடுத்திருந்தார். அந்தப் பதிவில், ""நம்மிடையே இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற பதிவுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால், மக்களை வீட்டில் இருக்கச் சொன்னதற்கு எனக்குக் கிடைத்தது இதுதான். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் மிகவும் எளிதான ஒன்று என்று நீங்கள் கருதுவீர்களானால், நீங்கள் நினைப்பது தவறு. பணம் நமக்கு வானத்திலிருந்து கொட்டுவதில்லை'' என்று மஞ்சிமா மோகன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT