தினமணி கொண்டாட்டம்

ஆசையை வெளிப்படுத்திய பிரியங்கா சோப்ரா

5th Apr 2020 06:02 PM

ADVERTISEMENT

விஜயின் தமிழன் படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின். இவர் பிரபல பாடகரான நிக் ஜோனஸ் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். கரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கரோனாவால் உண்டான சுய தனிமைப்படுத்தலென்பது கடவுள் தங்களுக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன்  என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்ததால் தங்களுடைய இல்லற வாழ்க்கையில் அதிகம் ஈடுபட இயலவில்லை என்றும், அதற்கான நேரம் தான் இது என பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தங்களுக்கு குடும்பத்தின் மீது ஆசை வந்துவிட்டதற்கு இந்த சுய தனிமைப்படுத்துதலும் ஒரு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT