உலகின் மிக மிக பிசியான விமான நிலையம், அட்லாண்டா ஹார்ட்ஸ் - ஃபீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்.
இங்கு தினமும் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஆண்டிற்கு 107 மில்லியன் மக்கள் பயணிக்கின்றனர்.
ஒரு காலத்தில் ஓட்ட பந்தய மைதானமாக இருந்து பின்னர் விமான ஓடு தளமாக மாறியிருக்கிறது.
ஆனால், மொத்த விமானங்கள் ஏறி இறங்குவதில் முதலிடம் இதற்கல்ல.
இங்குள்ள டெர்மினல்களுக்கு இடையே செல்ல பெரும்பாலோர் ரயிலை பயன்படுத்துவர்கள். ஆனால், நடந்து சென்றால் பல ஓவியங்களை, புகைப்படங்களை காணலாம். இவற்றில் அண்டார்டிகா புகைப்படங்களும் அடக்கம்.
இங்கு 63 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஜார்ஜியா பகுதியிலேயே இங்கு தான் மிக அதிக ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த விமான நிலையத்தின் அடியில் "ப்ளின்ட்' நதி ஒடுகிறது.