தினமணி கொண்டாட்டம்

காதல் அம்பு

22nd Sep 2019 03:31 PM

ADVERTISEMENT

ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில், எம்டிபிசி கிரியேஷன்ஸ் அண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் எம்.டி.சுரேஷ் பாபு, நவீன் குமார் இணைந்து தயாரித்து வரும் படம் "காதல் அம்பு'. ஒளிப்பதிவு, விக்னேஷ் நாகேந்திரன். இசை-சன்னி டான். இயக்கம், பிரவீன்.
 இப்படம் சம்பந்தமான விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, "மது அருந்துவதுதான் கலாசாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டது. எனவே, இதுபோன்ற காட்சிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்' என்றார். விழாவில் ஜாக்குவார் தங்கம், நடிகர் ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT