தினமணி கொண்டாட்டம்

இசைக்குப் பின்னால்!

22nd Sep 2019 03:54 PM

ADVERTISEMENT

இயற்கை அளித்த கொடையுடன் இசையால் இவ்வுலகை அசைத்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பி.சுசீலா. இவர்களைப் பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், இவர்களின் இந்த குரலை ஊக்குவித்து உலகறியச் செய்த பெருமை அவர்தம் கணவரையே சாரும் என்பது அவர்களின் கருத்து.
 ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பார் என்று கூறுவர். ஆனால், ஒரு பெண் வெற்றி பெறுவதற்கு இச்சமூகத்தில் போராட வேண்டும். அதுவே அவருடைய கணவன் துணையாக இருந்தால் எட்டாக் கனியாய் இருக்கும் வெற்றி, எளிதாக அவரின் கைகளில் வந்து சேரும்.
 கர்நாடக இசை உலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி. ஐ.நா.சபையில் பாடி நம் தாய்த்திருநாட்டைப் பெருமைப்படுத்தியவர்.
 அவருக்குப் பக்கபலமாக இருந்தது அவரது கணவர் கல்கி தியாகராஜன் சதாசிவம். இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்,பாடகர்,பத்திரிகையாளர், படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ்ப் பத்திரிகை "கல்கி'யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர்.
 ரயில் பயணம் ஒன்றில் பயணித்தபோது எம்.எஸ் ûஸக் கண்ட அவர் பிடித்துப் போய் தமது துணைவியாக்கிக் கொண்டார்.பின் அவரின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்தவர். "எனக்கு எதுவும் தெரியாது, தன் கணவரே எல்லாமுமாகி இருக்கிறார்' என நெகிழ்ந்து போய் கூறுவார் எம்.எஸ்.
 என் அம்மாவுக்குப் பிறகு என் நலம் பற்றி சிந்திப்பவர் தன் பதியே என்று உருகியவர், கணவர் சதாசிவத்தின் மரணத்திற்குப் பிறகு வெளியில் எங்கும் பாடவேயில்லை. அவ்வளவு தூரம் இசைக்குள் இசையாய் இருந்தவர் எனக் கூறலாம்.

இதேபோல் திரைப்படத்துறையில் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சியவர் இசையரசி பி.சுசீலா. இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனைப்படைத்தவர்.
 இவற்றை சாத்தியமாக்க உறுதுணையாக இருந்தவர் தனது கணவர் டாக்டர்.மோகன்ராவ்தான் என மெய் சிலிர்த்துப் போகிறார் பி.சுசீலா.
 தனது வளர்ச்சிக்காக எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளார் தனது கணவர் என பெருமிதத்துடன் கூறுகிறார்.இவரின் வசீகர குரலில் ஈர்க்கப்பட்டு இவரை கரம்பிடித்தார் மோகன்ராவ்.
 சுசீலாவை இசைக் கச்சேரிகளுக்கு அழைப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருபவர்களை முதலில் ஒரு முகம் புன்னகையுடன் வரவேற்று உபசரிக்கும். அவர்தான் மோகன்ராவ் என்ற மாமனிதர்.
 -கலைச்செல்வி சரவணன், சென்னை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT