தினமணி கொண்டாட்டம்

ரம்யமான ரயில் பயணம்!

17th Sep 2019 12:56 PM

ADVERTISEMENT

டெலிவிஷன், டெலிபோன், நீராவி எஞ்சின், மயக்க மருந்து, பென்சிலின், பெடலுடன் கூடிய சைக்கிள், தசமபுள்ளி ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்காட்லாந்துகாரர்கள்.
 முதலில் அமெரிக்கா மற்றும் க்ரீன்லாந்துடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பின்னர் அவற்றிலிருந்து பிளவுபட்டு, ஐரோப்பா, பிரிட்டனுடன் இணைந்தது ஸ்காட்லாந்து!
 ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு! வடக்கு தெற்காக அமைந்துள்ள இது பிரிட்டிஷ்காரர்களின் கையில் உள்ளது.
 1999-ஆம் ஆண்டில் முதல் தனி நாடாளுமன்றம் இயங்குகிறது. 129 பேர் உறுப்பினர்கள் முதன்மை அமைச்சர் என்பதுதான் பெரிய பதவி.
 ஸ்காட்லாந்து தலைநகரம் எடின்பரோ. ஆனால் பெரிய நகரம் கிளாஸ்கோ.
 மலைகள் சமவெளிகள்.. அழகான கடற்கரைகள். இயற்கை காட்சிகள், ஆழமான ஏரிகள் எனப் பலவற்றைக் கொண்டது.
 பிரபல டென்னிஸ்வீரர் ஆன்டி முர்ரே ஸ்காட்லாந்துகாரர்.
 "ஹாரிபாட்டர்' சீரியல்களில் ஒன்று ஸ்காட்லாந்து பின்னணி கொண்டது.
 லண்டன்-ஸ்காட்லாந்து ரயில் பயணம் ரம்யமாய் இருக்கும். கடல் அருகிலேயே இந்த ரயில் செல்லும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT