தினமணி கொண்டாட்டம்

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர்

20th Oct 2019 10:45 AM

ADVERTISEMENT

நயன்தாரா, டாப்சி உள்ளிட்டோர் தங்களுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், தமன்னாவும் அவ்வப்போது இதுபோன்ற கதைகளைத் தேர்வு செய்கின்றனர். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கெனவே "அம்புலி' , "அ ", "ஜம்புலிங்கம்' படங்களை இயக்கியுள்ளனர். ஹன்சிகாவுக்கு வில்லனாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஏற்கெனவே இவர் ஹிந்தியில் "அக்ஸர் 2', மலையாளத்தில் "டீம் 5' படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் ஹன்சிகா படம் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். , காமெடி, பேய்ப்படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT