தினமணி கொண்டாட்டம்

புகைப்பட கலைஞரின் கதை

20th Oct 2019 11:32 AM

ADVERTISEMENT

24 மணி நேரத்தில் நடந்து முடியும் கதையாக உருவாகி வரும் படம் "எதிர் வினையாற்று' தமிழ் சினிமாவில் சமீபகாலமாக க்ரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் புகைப்படக் கலைஞர் ஓர் நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே கதை.
 சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கியிருக்கிறார்கள். அலெக்ஸ், சனம் ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ் நடிக்கின்றனர்.
 கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்குகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT