1899-ஆம் ஆண்டு "சுதேசமித்திரன்' தொடங்கப்பட்டது. 1917-ஆம் ஆண்டு திரு.வி.க வை ஆசிரியராகக் கொண்டு "தேச பக்தன்' என்ற நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
1924-ஆம் ஆண்டு பி. வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு' பத்திரிகையையும் 1930-இல் "இந்தியன்' இதழும், 1933-இல் ஜெயபாரதி நாளிதழும் என தொடர்ந்தது. 1934-இல் தினமணி பிறந்தது.
பாரதியார் நினைவு நாளும், தினமணி தொடக்க நாளும் ஒன்றே!
தமிழர்களால் தமிழர்களின் நலனுக்காக நடத்தப்படும் அச்சமற்ற பத்திரிகை என்பது தினமணி விளம்பரத்தில் காணப்பட்ட ஆரம்பக் கால முழக்கம்!
தினமணி வெற்றியைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் நாளிதழ் தொடங்க கோயங்கா முடிவெடுத்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருந்ததால் அவர்களுக்காக 1938-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் "ஆந்திர பிரபா' என்ற தெலுங்கு நாளிதழைத் தொடங்கினார்.
கோயங்காவை "கடவுளே' என்று அழைப்பது கல்கி டி.சதாசிவத்தின் வழக்கம்!
(டி.ஜெ.எஸ் ஜார்ஜ் தொகுத்த கோயங்கா கடிதங்கள் நூலிலிருந்து)