புறா பந்தயக் கதை

பந்தயங்களை முன் வைத்து தமிழில் அவ்வப்போது சினிமாக்கள் வருவதுண்டு. ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு படங்கள் வந்துள்ளன.
புறா பந்தயக் கதை

பந்தயங்களை முன் வைத்து தமிழில் அவ்வப்போது சினிமாக்கள் வருவதுண்டு. ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு படங்கள் வந்துள்ளன. சேவல் சண்டையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய "ஆடுகளம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் அடுத்து வருகிறது புறா பந்தயக் கதை. டி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு "பைரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாளைய இயக்குநர் சீஸன் 5-இல் பெரும் கவனம் ஈர்த்த ஜான் கிளாடி இப்படத்தை எழுதி இயக்குகிறார். சையத் மஜீத் , மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றனர்.
 விஜி சேகர், எஸ்.ஆர்.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் முழுமையாகப் பேசும் திரைக்கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com