தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ

சத்யஜித்ரேவின் "தி புரோக்கன் ஜர்னி' உள்ளிட்ட வங்காள மொழிப் படங்களில் நடித்த சுவலட்சுமி, தமிழில் தனியொரு இடத்தைப் பிடித்தார்.
தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ

சத்யஜித்ரேவின் "தி புரோக்கன் ஜர்னி' உள்ளிட்ட வங்காள மொழிப் படங்களில் நடித்த சுவலட்சுமி, தமிழில் தனியொரு இடத்தைப் பிடித்தார். விஜய்யுடன் "லவ் டுடே' , அஜீத்துடன் "ஆசை' படங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு வருகிறார் நடிகர் மணி. "தேசி' கன்னடப் படத்தில் அறிமுகமாகி பிறகு வங்காளம், ஹிந்தி படங்களில் நடித்துள்ள இவர், இந்திய அரசின் பரம்ஸ்ரீ விருது, மகாராஷ்டிரா அரசின் கவுரவ் சம்மான் விருது பெற்றிருக்கிறார். "இளவட்டம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.ராஜராஜன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மணி.
 "கேரளம்தான் பூர்வீகம். நடிப்பு மீது தீராத ஆசை. கன்னடம், ஹிந்தி, வங்காளம் மொழிகளில் நடித்து வந்தேன். பெரிய அங்கீகாரங்கள் கிடைத்தன. தமிழனான எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போதுதான் நிறைவேறுகிறது. இது ஒரு ஆக்ஷன் கதையாக உருவாகவுள்ளது. சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. விக்ரம் என் ரோல் மாடல்'' என்கிறார் மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com