சமந்தா இடத்தில் ஷ்ரத்தா

சமந்தா இடத்தில் ஷ்ரத்தா

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த ஆண்டு வெளியாகிய படம் "இரும்புத்திரை' . விஷாலுடன், சமந்தா, அர்ஜுன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த ஆண்டு வெளியாகிய படம் "இரும்புத்திரை' . விஷாலுடன், சமந்தா, அர்ஜுன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் விஷாலுக்கு இது வெற்றிப்படமாக அமைந்தது. இதனையடுத்து "இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்றது. "இரும்புத்திரை' இரண்டாம் பாகத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக இயக்குநர் எழிலின் உதவியாளர் ஆனந்த் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஷால் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த சமந்தாவுக்கு பதில் ஷ்ரத்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷ்ரத்தா தற்போது அஜித் நடித்து வரும்" நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com