360 டிகிரி

நாம் கழுத்தை அசைக்கும் போது "டிரிக்' எனப்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.

நாம் கழுத்தை அசைக்கும் போது "டிரிக்' எனப்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.
-பரத், சிதம்பரம்
✦ ஒரே சமயத்தில் 60 முதல் 70 முட்டைகள் வரை பாம்பு இடும். பாம்பு முட்டை கிழே விழுந்தால் கூட உடையாது.
✦ கருவுற்றிருக்கும் பெண்கள் சூறை தேங்காய் உடைக்கக்கூடாது. அதோடு மட்டுமல்லாமல் பூசணிக்காய் திருஷ்டி சுற்றி உடைக்கவும் கூடாது.
✦ மோட்டர்-பெடல் என்பதன் சுருக்கமே "மொபட்'.
✦ கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் அபிஷேகத் தீர்த்தத்திற்கு" கோமுகி நீர்' என்று பெயர். 
-அமுதா அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி

யானைகள் ஆஸ்பத்திரி
உத்திரபிரதேசத்தின் மதுரா ஜில்லாவில் ஆக்ரா அருகே உள்ள சுமுரா என்ற இடத்தில் யானைகள் ஆஸ்பத்திரி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 22 யானைகள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. நம்மை போன்று - யானைகளுக்கும் பல்வலி முதல் கால் வலி வரை அனைத்து வியாதிகளும் உண்டு.
இதனால் இந்த ஆஸ்பத்திரிகளில் அவற்றிற்கு பல வித சிகிச்சைகளை அளிக்க ஏதுவாய் எக்ஸ்ரே, லேசர் சிகிச்சை, பல் சார்ந்த எக்ஸ்ரே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் மூலம் வாயினால் கூறி அழ வாய்ப்பு இல்லாத இவற்றின் வியாதிகளை ஓரளவுக்கு குணப்படுத்த இயலும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை ஒட்டியே, யானைகள் சகஜமாக நடமாடும் பகுதி உள்ளதால், உத்தரபிரதேச காட்டு இலாக்காவும், இந்த மருத்துவமனைக்கு முழு உதவியளிக்க முன் வந்துள்ளது.

விமான பைலட்டாக பெண்கள்
வியாபார நோக்கில் பறக்கும் விமானங்களை ஓட்டுவதில் இந்திய பெண் விமான பைலட்டுகள் முன்னணி வகிக்கின்றனர்.
✦ இந்தியாவில் 1092 முழு நேர லைசென்ஸ் பெற்ற பெண் விமான பைலட்டுகள் உள்ளனர்.
✦ இந்திய பைலட்டுகள் மொத்தம் 8797. இதில் 12.41 சதவிகிதம் பெண்கள். இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகியுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் இரண்டு மடங்கு ஆகலாம்.
✦ உலகில் 1,54, 957 பைலட்டுகள் உள்ளனர். இவற்றில் 8477 பெண் பைலட்டுகள். இதில் 13 சதவிகிதம் இந்திய பெண் பைலட்டுகள்.
✦ பல மேற்கத்திய நாடுகளை ஓப்பிட்டால், இந்திய பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை அதிகம்.
✦ சீனாவை விட 50 சதவிகிதம் அதிகம். அங்கு மொத்தமே 713 பெண் பைலட்டுகள் தான் உள்ளனர்.
-ராஜிராதா, பெங்களூரு

திரு, யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத்து, பொன், சொல், வேதங்கள், மேகம், நிலம், கங்கை, உலகம், பரிதி, அமிர்தம் ஆகிய 22 சொற்களும் மங்கலச் சொற்களாகும்.
✦ உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலாக அகரவரிசை தோன்றியது. அதன் பெயர் அகராதி நிகண்டு. 
✦ இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த மிகச்சிறிய போர் 1896-இல் நடந்தது. இங்கிலாந்தும், சான்சியா நாடும் 38 நிமிடங்களில் போரை முடித்துக் கொண்டன.
-நெ.இராமன், சென்னை

சக்கரவர்த்தி
மூதறிஞர் ராஜாஜி பசுல்லா சாலையிலுள்ள வீட்டில் வசித்து வந்த போது மைசூர் மகாராஜா அவரைக் காண வந்தார்.
அவரை வரவேற்க ராஜாஜி வெளியே வந்த போது திடீரென்று அவரது காலில் விழுந்து வணங்கினார் மகாராஜா.
அதைக்கண்டு பதறிப் போன ராஜாஜி ""நீங்கள் மகாராஜா என்ன இப்படிச் செய்து விட்டீர்களே!'' என்றார்.
அதற்கு மகாராஜா "நான் என்ன சாதாரண மகாராஜாதானே! ஆனால் நீங்கள் சக்கரவர்த்தி ஆயிற்றே!'' என்று கூறியதும் ராஜாஜிக்கு மெய் சிலிர்த்து போய்விட்டது.
(சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்பதே அவருடைய முழுப் பெயர். பின்னர் ராஜாஜி ஆயிற்று)
-கடலூர் உ. ராஜமாணிக்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com