21 ஜூலை 2019

சிறுவனும் யானையும்

DIN | Published: 23rd June 2019 08:40 AM

குழந்தைகளின் உலகத்தைப் படம் பிடிக்கும் விதமாக உருவாகி வரும் படம் "ராதாகிருஷ்ணன்'. யானைக்கும் - சிறுவனுக்குமான உறவை, நேசத்தை சொல்லுவதுதான் இதன் திரைக்கதை. மாஸ்டர் ஆதித்யா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுராஜின் உதவியாளர் ரஜினி இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார்.
 படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "ஒரு சிறுவனின் வாழ்க்கையில் வந்து போகிற யானையின் கதைதான் படம்.
 மனிதனுக்கும், விலங்குக்குமான , பாசத்தைச் சொல்லுவதாக திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. பிராணிகளுடன் வாழும் மன நிலை என்பது நம் ரத்தத்திலேயே உண்டு. நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக் கொள்கிறார்கள். இப்படியான ஒரு சூழல்தான் இந்தக் கதையின் கரு. நாம் எல்லோருமே ஏதோ ஒரு பிராணியிடம் ஒரு காதலை, பிரிவை மீட்டெடுத்துதான் வளர்ந்திருக்கிறோம்' என்றார் இயக்குநர் ரஜினி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நிழல் காந்தியின் நிஜ முகவரி
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
சோளக்காட்டில் வனக்குடில்!
ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!