21 ஜூலை 2019

குட்டி ரேவதி இயக்கும் சிறகு

Published: 23rd June 2019 08:36 AM

ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வை கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு. கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி வரும் படம் "சிறகு'. இந்தப் படம் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், "தனிமைச் சிறகினிலே' என்ற பாடலின் விடியோவை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டீசரை ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் காபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாலா மணியன் தயாரிக்கிறார்.
 அரோல் கொரேலி இசையமைக்கிறார். "மெட்ராஸ்', "கபாலி', "வடசென்னை", "சண்டைக்கோழி}2' ஆகிய படங்கள் மூலமாகக் கவனம் ஈர்த்த ஹரி கிருஷ்ணன், அக்ஷிதா, நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை அருண்குமார் கவனிக்கிறார். "இசையும் பயணமும் கொண்ட இப்படத்தின் கதையும் காட்சி அமைப்பும் நிச்சயம் நம்மை இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் இளைப்பாறச் செய்யும் என்றே தெரிகிறது' என்கிறார் குட்டி ரேவதி.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நிழல் காந்தியின் நிஜ முகவரி
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
சோளக்காட்டில் வனக்குடில்!
ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!