21 ஜூலை 2019

ஆயிரம் ஜென்மங்கள்

Published: 23rd June 2019 08:42 AM

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "ஆயிரம் ஜென்மங்கள்'. ஜி.வி. பிரகாஷ், ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையாக உருவாகி வரும் இப்படத்தை எழில் எழுதி இயக்குகிறார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்தச் சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
 இந்தத் திகில் படத்தை, மிகவும் ஜனரஞ்சகமாகத் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து, மிகவும் சுவராஸ்யமாக உருவாக்கி வருகிறார் எழில். யூ.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனித்திருக்கிறார்.சத்யா - இசை. யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
 படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நிழல் காந்தியின் நிஜ முகவரி
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
சோளக்காட்டில் வனக்குடில்!
ஆன்மாக்களை முத்தியடையச் செய்யும் கங்கை!