செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

பாராட்டிய தமிழ் இசையமைப்பாளர்

Published: 09th June 2019 12:00 AM

சமீப காலமாக த்ரில்லர் வகை படங்கள் அதிகரித்துள்ளன. இந்த வகை படங்களுக்கு இசை மிகவும் முக்கியம். அந்த வகையில் "மாயா'," நரகாசூரன்', "இறவாக்காலம்', "கேம் ஓவர்', "ஒப்பம்' என்று வரிசையாக த்ரில்லர் படங்களின் பின்னணி இசைக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படங்களின் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோகன். 
த்ரில்லர் படங்களுக்கு இசையமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து தான் அளித்த பேட்டியில்... "நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன். தாத்தா சேவியர், அப்பா ராஜன் இருவரும் முன்னணி இசையமைப்பாளர்களிடம் இசைக்குழுவில் வயலின், கிடார் வாசித்தவர்கள். லண்டனில் கல்லூரிப் படிப்பு. முதல் படமான மாயாவுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து த்ரில்லர் படங்களே அதிகம் வருகின்றன.  குறிப்பிட்ட படங்களுக்குள் சிக்க விரும்பவில்லை. எல்லா வகைப்படங்களுக்கும் இசை
யமைக்க விரும்புகிறேன். வீட்டில் நிறையப் பாடல்கள் இசையமைத்து வைத்துள்ளேன். "மாயா' படப்பிடிப்பில் நயன்தாராவை சந்தித்தேன். அவர் என் இசையைக் கேட்டு வியந்தார். இப்போது "கேம் ஓவர்' படத்தை ஹிந்தியில் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார். அவர் படத்தைப் பார்த்துவிட்டு என் இசை உள்பட படத்தின் அனைத்து தொழில்நுட்பங்களையும் பாராட்டினார். ஹாலிவுட் அளவுக்கு படம்  இருக்கிறது என்றார். தமிழ் நாட்டுப்புற இசை எனக்குப் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்துவேன். ரஜினி, கமல், விஜய், அஜித் என கமர்ஷியல் ஹீரோக்கள் படங்களிலும் இசையமைக்க வேண்டும். அப்பா காலத்து பாடகர்களான எஸ்.பி.பி., யேசுதாஸ்,.ஜானகி ஆகியோரை பாட வைக்க விருப்பம். ரீமிக்ஸ் பாடல்களில் தவறு இல்லை. ஆனால் ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடல்களைக் கெடுக்கக் கூடாது' என்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி
சொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை!
பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!
ரோஜா மலரே! 5 - குமாரி சச்சு
உங்களுக்குத் தெரியுமா?