வியாழக்கிழமை 27 ஜூன் 2019

சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published: 09th June 2019 12:00 AM


"கனா'  படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் பேசும் போது...

"கனா'  படத்தை ஆரம்பிக்கும்போது நண்பர்களுக்காகச் செய்தோம். அடுத்து யூடியூபில் பிரபலமாக உள்ள ஆளுமைகளை வைத்துப் படம் எடுக்க  ஆசை. தொலைக்காட்சியில் இருந்து வந்தவன் நான், அப்படித் தொலைக்காட்சியில் இருந்து வரும் கலைஞர்களை வைத்துப் படம் செய்யவும் ஆசை. அந்த இரண்டும் இந்த ஒரே படத்தில் அமைந்திருக்கிறது. 4 ஆண்டுகளாக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பாடல் தான் ரிங்டோன். அதே இந்தப் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.   நாஞ்சில் சம்பத், மயில்சாமி போன்ற சீனியர்கள் படத்துக்கு மிகப்பெரியப் பலமாக இருந்திருக்கிறார்கள்.

"கனா' படம் மிகப்பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்தது, ஷங்கர் சார் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் தயாரிப்பில் அடுத்தப் படத்தை "அருவி'  படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். என் நடிப்பில் வரும் அடுத்தடுத்த படங்கள் நல்ல படங்களாக இருக்கும். வெற்றி பெறும் போது அணியாகத் தெரியும், தோற்கும் போது தனியாக இருப்பது போலத் தெரியும். ஆனாலும் அப்போதும் கூட நிற்பது ரசிகர்களாகிய நீங்கள் தான்'' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் சிவகார்த்திகேயன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தெரு 20 கிரிக்கெட் போட்டி: கனவை நனவாக்கிய தென்னிந்திய அணி..!
பழைய சோறுக்கு புது மவுசு
சிவன் கோயில் கட்டிய குப்லாய்கான்
ஆஷிகாகா மலர்கள் திருவிழா! - சாந்தகுமாரி சிவகடாட்சம்
360 டிகிரி