செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

விண்வெளி விநோதம்: தூங்குவதற்கு ஊதியம் 13 லட்சம்!

DIN | Published: 09th June 2019 03:01 PM

மனிதன் தான் வாழும் பூமியில் மட்டுமே சாதனைகளைப் படைத்து வந்த பின்னர் பூமியைக் கடந்து விண்வெளிக்குச் சென்றது அவனுடைய சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. விரைவாக வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம்  விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தான். இதன் மூலம் ஒரு விண்வெளி சகாப்தம் உருவானது. 

இதனைத் தொடர்ந்து மனிதன் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்தான். இத்துடன் முடிந்து விடாமல் செவ்வாய் உள்பட மற்ற கிரகங்களுக்கும், கிரகங்களில் சந்திரனுக்கு, ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி ஆய்வை மேற்கொண்டும் வருகிறான். சூரியனின் சுற்றுப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி சூரியனையும் ஆய்வு செய்துள்ளான்.

விண்வெளி என்பது மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடம். அங்கு வாழ்வதற்கான சூழலைக் கொண்ட விண்கலங்களைத் தயாரித்து, பூமியைச் சுற்றிக் கொண்டே ஆய்வுகளைச் செய்தான். பின்னர் நிரந்தரமாக விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக விண்வெளி ஆய்வு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. விண்வெளியில்  ஒரு நிலையத்தைக் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல.  12 ஆண்டுகளாக இந்தப் பணி நடந்து  வருகிறது. இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கப் போகின்றன. அவற்றில் ஒன்று தான் மனிதனை அங்கேயே தங்க வைப்பது. 

விண்வெளியைப் பொருத்தவரை அங்கு மனிதர்கள் சந்திக்கும் முதல் சிக்கல் புவியீர்ப்பு விசை இல்லாதது தான். இதனால் உடலில் உள்ள நீர் முழுவதும் தலைப்பகுதிக்கு பயணிக்க ஆரம்பிக்கும். இதன்காரணமாக தலைசுற்றல், கை நடுக்கம் முதலியவை விண்வெளி வீரர்களைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். இதனைக் கருத்தில் கொண்டே நாசா செயற்கை புவியீர்ப்பு தடையை உருவாக்கியிருக்கிறது. இந்தக்  குறிப்பிட்ட அறைக்குள் புவியீர்ப்பு விசை இருக்காது அதாவது உங்களால் உங்களுடைய எடையை உணர முடியாது.

இதனால் நாம் வீட்டில் சுகமாக மெத்தையில் தூங்குவது போலவோ, டி.வி. பார்த்தபடி சோபாவிலேயே தூங்கிவிடுவது போலவோ விண்வெளியில் தூங்க முடியாது. அங்கே பாய்விரிக்கக்  கூட முடியாது.  எப்படித் தூங்கினாலும் இடுப்பில் பெல்ட் அணிந்து, அசையாத பொருளில் கட்டிக் கொண்டுதான் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் மிதந்து நகர்ந்து போய்விடுவார்கள். 

அமெரிக்க விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி  ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர். விண்வெளியில் செயற்கை புவியீர்ப்பு விசை, விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவும் என அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக  12 ஆண்கள் மற்றும் 12 பெண்களை இந்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபடுத்த உள்ளது. அவர்கள் 60 நாள்களுக்குப் படுக்கையிலேயே எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். நாசா இதற்காக சம்பளம் வழங்க உள்ளது. அதாவது, இந்திய ரூபாயில் 13 லட்சம் ரூபாய் ஆகும்.

நாசா மேற்கொள்ளவுள்ள இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தூங்குவது மட்டுமல்லாமல் உணவு, ஓய்வு, குளியல், ஆராய்ச்சிகள் என அனைத்துமே படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும் என நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நடைபெறும்போது ஆய்வில் ஈடுபடுபவர்களின் அறிவாற்றல், தசை பலம், உடல் சமநிலை, இதயச் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். பங்கேற்பாளர்களில் பாதிபேர் எந்தவிதமான புவியீர்ப்பு விசையும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள். 

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்று தோன்றக்கூடிய உணர்வு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதற்காகப் பூமியில் இருப்பது போன்று ஈர்ப்பு விசையை செயற்கையாக உருவாக்குவது நிச்சயம் உபயோகமாக இருக்கும்” என நாசாவின் தலைமை  ஆராய்ச்சி திட்டத்தின் உதவித் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் லெடிசியா வெகா தெரிவித்துள்ளார்.

மனிதன் சுற்றுலா செல்வதில் வளர்ந்து விட்டான். அவன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறான். அதே போல் பூமியைத் தவிர வேறு இடத்திலும் குடியேற விரும்புகிறான் ஆசைப்படுகிறான். இதனைப் பயன்படுத்தி மனிதனை விண்வெளியில் குடியமர்த்த பல விண்வெளி நிறுவனங்களும் விரும்புகின்றன. விண்வெளியில்  காலனியை ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டம் தற்போது உருவாகி உள்ளது. அதற்கான, ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு உள்ளனர். விண்வெளியில் குடியமர்த்துதல் என்பது ஒரு வீரமான செயல் தான்.

விண்வெளியில் உருவாக்கப்படும் குடியிருப்பை விண்வெளி காலனி (நல்ஹஸ்ரீங் இர்ப்ர்ய்ஹ்) அல்லது பூமியின் சுற்றுப்பாதை காலனி (ஞழ்க்ஷண்ற்ஹப் இர்ப்ர்ய்ஹ்) அல்லது விண்வெளி நிலையம் (நல்ஹஸ்ரீங் நற்ஹற்ண்ர்ய்) என அழைக்கலாம். இது விண்வெளியில் ஒரு சிறு நகரம். இங்கு குடும்பத்துடன் வசதி படைத்த கோடீஸ்வரர்கள் வாழலாம்.

விண்வெளியில் மக்கள் வாழ்வதற்குக் காற்று, நீர், உணவு ஆகியவை அவசியம் தேவை. இது தவிர போதிய தட்பவெப்ப நிலை, ஈர்ப்பு விசை ஆகியவை நீண்ட காலம் வாழ்வதற்குத் தேவை. பூமியில் உயிர்கோளம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறது. ஆனால், விண்வெளியில் மறு சுழற்சி மூலமே இதனைப் பெற முடியும். கார்பன்-டை- ஆக்ûஸடை  மறுசுழற்சி மூலமே ஆக்ஸிஜனாக மாற்ற வேண்டும். விண்வெளி குடியிருப்பில் செயற்கையான உயிர்க்கோளத்தை உருவாக்க வேண்டும். விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தி கிடைக்கிறது. இதனைக் கொண்டு பயிர் செய்யலாம். இதற்கு நிலவின் மண் ஏற்றதாக இருக்கும்.

விண்வெளியின் சூழலுக்கு ஏற்ப வாழ சுழலும் சக்கரம் தயாரிக்கப்படும். அது தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும். இது பூமியைப் போல் சுற்றுவதால், பூமியில் காணப்படும் ஈர்ப்பு விசை போல் இதனுள்ளும் ஏற்படும். இதனால் புவி ஈர்ப்புப் பிரச்சனை தீர்க்கப்படும். விண்வெளியில் காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரியக் கதிர் வீச்சுக்களால் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் குடியிருப்புகள் உருவாக்கப்படும். மீறி உள்ளே நுழையும் கதிர்களை குடிப்பிருப்பில் பயிர் செய்யப் பயன்படுத்தப்படும் சந்திர மண் அவற்றை உறிஞ்சிக்கொள்ளும். விரைவில் விண்வெளியில் மனிதன் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகளை விரைவில் கட்டப்போவது நிச்சயம். 

மேற்கண்ட  ஆராய்ச்சியின் முடிவு வெற்றிகரமாக எட்டப்படும்போது செயற்கை புவியீர்ப்பு விசையை உருவாக்கக்கூடிய வசதியைச் செவ்வாய் போன்ற கிரகங்களுக்குச் செல்லும் விண்கலங்களில் நாசா வடிவமைக்கும். இந்த வசதியானது விண்வெளி வீரர்களை உடலளவில் மேலும் வலுவாக்கும் என நாசா நம்புகிறது.

தகவல் உதவி: CNBC.com - வனராஜன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி
சொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை!
பசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்!
ரோஜா மலரே! 5 - குமாரி சச்சு
உங்களுக்குத் தெரியுமா?