சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!

DIN | Published: 21st July 2019 10:12 AM

இந்தியாவிலேயே சமஸ்கிருத மொழியில் வெளியாகும் ஒரே நாளிதழான "சுதர்மா'. 1970-ஆம் ஆண்டு முதல் மைசூரிலிருந்து வெளியாகிறது. அடுத்த ஆண்டு இது ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.
 1945- ஆம் ஆண்டு சமஸ்கிருத பண்டிதரான வரதராஜ ஐயங்கார் என்பவர் அச்சகம் ஒன்றை துவக்கி புத்தகங்கள், அரசாங்க கெஜட், கன்னடம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கேள்வித்தாள்களை அச்சிட்டு கொடுத்து வந்தார்.
 1963-ஆம் ஆண்டு பெண் கல்விக்காக பள்ளி ஒன்றை துவங்கிய வரதராஜ ஐயங்கார், சமஸ்கிருத மொழி குறித்து கருத்தரங்கங்கள் நடத்தினார். 1970-ஆம் ஆண்டு சமஸ்கிருதம் தினந்தோறும் மக்களிடம் சென்றடைய வேண்டுமென்பதற்காக "சுதர்மா' என்ற நாளிதழை தொடங்கினார். துவக்கத்தில் அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் தற்போது 3,500 ஆக உயர்ந்துள்ளது.
 ஏ-3 அளவில் இரு பக்கங்களில் ஐந்து பத்திகளை கொண்ட "சுதர்மா', 2009-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ வேண்டுமென்பதற்காக இ-பேப்பராக உருவெடுத்தது. தற்போது, வரதராஜ ஐயங்காரின் மகன் சம்பத்குமார், ஆசிரியர் பொறுப்பேற்று நடத்துகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி உதவியாக இருக்கிறார்.
 தொடக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக கருதப்பட்ட சமஸ்கிருதத்தை யார் வேண்டுமானாலும் கற்கலாம். இது நம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி. ஆரம்பத்தில் மாதம் ஒரு ரூபாய் சந்தாவாக இருந்ததை தற்போது ஆண்டுக்கு 500 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் பத்திரிகை அனுப்பப்படுகிறது.
 தற்போது ஆசிரியர் குழுவில் நான், என் கணவர் மற்றும் ஆறு அறிஞர்கள் மற்றும் பத்திரிகை அச்சிட சில ஊழியர்களும் இருக்கிறோம். அறிஞர்கள் யாரும் ஊதியம் பெறுவதில்லை. இலவசமாக பணியாற்றுகிறார்கள். அச்சக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம்.
 ஒரு நாள் பத்திரிகையை அச்சிட 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அச்சு கோர்ப்பு மற்றும் அச்சிட ஆறு முதல் ஏழு மணி நேரம் தேவைப்படுகிறது என்ற கூறும் ஜெயலட்சுமி, அடுத்த ஆண்டு "சுதர்மா' இதழுக்கு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, 200 பக்கம் கொண்ட மலர் ஒன்றை வெளியிடவும், ஆண்டு முழுவதும் சமஸ்கிருத மொழியை பிரபலபடுத்த கருத்தரங்குகள் நடத்தவும் தீர்மானித்திருக்
 கிறாராம்.
 - அ.குமார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இயற்கையை நேசிக்கும் அற்புத மனிதர்!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

தமிழக இளைஞர் சாதனை
பராக்பூர்
ஓர்ச்சா