தினமணி கொண்டாட்டம்

வாசகர் கடிதங்கள்!

15th Jul 2019 01:42 PM

ADVERTISEMENTதினமணி கொண்டாட்டம் 07.07.2019 இதழில் வெளியான  சைக்கிளால் சாதித்த சவுந்தர்ராஜன் பற்றிய தன்னம்பிக்கை கட்டுரை ஊக்கம் அளித்தது. இது போன்ற கட்டுரைகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல சாதிக்க நினைப்பவர்களுக்கும் இது உற்சாக டானிக். 
-மோனிகா, சென்னை

விக்ரகங்களுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் உள்ளன என்பதை படிக்கும் போது வியப்பாக இருந்தது. பக்தியோடு உருவாக்குகிறார்கள் என்பது மெய்சிலிர்க்க வைத்தது.
-சுரேஷ், திருச்செங்கோடு

ஏழைக்கு என்ன கொடுப்பீர்!  என்ற நாடோடிக்கதை அன்னை தெரசாவை நினைவூட்டியது. 
-அனிதா, திருச்சி

வெங்கட்ராமுக்கு ஏற்பட்ட காது குடைச்சலை வைத்தே காதுகள் நாவலை எழுதியிருக்கிறார் என்று சா.கந்தசாமி  சொன்ன தகவல் மூலம் ஒருவருக்கு ஏற்படும் கஷ்டத்தை கூட இன்பமாக எடுத்துக்கொள்ள தோன்றியது.
-சேகர், திருவண்ணாமலை 

ADVERTISEMENT

தமிழ் சினிமாவை பாலமுருகன் போன்ற கதாசிரியர்கள் அலங்கரித்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 
-செங்குட்டுவன், திருவல்லிக்கேணி

ADVERTISEMENT
ADVERTISEMENT