தினமணி கொண்டாட்டம்

பெரும் பணக்காரர்கள் வசிக்கும் நாடு..!

15th Jul 2019 01:13 PM

ADVERTISEMENT


உலகின் பெரும் பணக்காரர்கள் பற்றி ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடக்கும். அதன்படி உலகின் பெரும் பணக்காரர்கள்  15 நாடுகளில் தான் அதிகம் குவிந்துள்ளனர். அவை:

அமெரிக்கா: இங்கு 705 பில்லியனர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் வசிக்கின்றனர்.

சீனா: 285 பில்லியனர்கள் இங்கு உள்ளனர். இப்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. காரணம் அமெரிக்கா}சீனா இடைய நடக்கும் வர்த்தக யுத்தம்.

ஜெர்மனி: 146 பில்லியனர்கள் இங்கு இருக்கிறார்கள். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு. அதனால் உருவானவர்கள் இந்த பில்லியனர்கள்.

ADVERTISEMENT

ரஷ்யா: 102 பில்லியனர்கள் உள்ளார்கள். பொருளாதாரத்தில் ரஷ்யா நல்ல முன்னேற்றம் கண்டதின் விளைவு பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

பிரிட்டன்: 97 பில்லியனர்கள் இங்கு வசிக்கிறார்கள். முன்பை விட 16 சதவிகிதம் குறைந்து விட்டனர்.

ஸ்விட்சர்லாந்து:  இங்கு 91 பில்லியனர்கள் இருக்கிறார்கள். சாக்லெட்ஸ் மற்றும் வைரம் விற்பனையே இந்த பில்லியனர்களின் எண்ணிக்கைக்கு காரணம்.

ஹாங்காங்: 87 பில்லியனர்கள் உள்ளனர். வீடு கட்டும் தொழில் சார்ந்த கட்டட தொழிலில் சம்பாதித்து பில்லியனர்கள் ஆனவர்கள் அதிகம்.

இந்தியா:  82 பில்லியனர்கள்.  இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். நாட்டின் 73 சதவிகித சொத்து மதிப்பு 1 சதவிகித பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது.

சவுதி அரேபியா:   57 பில்லியனர்கள் இருக்கிறார்கள்.  பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் ஏற்றுமதி மூலமே இந்த பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.

பிரான்ஸ்: 55 பில்லியனர்கள் உள்ளனர். சொகுசு மற்றும் பேஷன் வியாபாரத்தில் முதன்மை வகிக்கும் பிரான்ஸ், அவற்றின் மூலமே பல பில்லியனர்களை உருவாக்கியுள்ளது.
- ராஜிராதா, பெங்களூரு


* உலக நாடுகளில் பராகுவே நாட்டின் கொடியில் மட்டுமே ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ராமாயணம் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்துள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா தனது இல்லத்திற்கு ராமாயணா என பெயர் வைத்துள்ளார். 
- க.ரவீந்திரன், ஈரோடு
 

ADVERTISEMENT
ADVERTISEMENT