தினமணி கொண்டாட்டம்

சந்திரசேகர ஆசாத்

27th Aug 2019 04:11 PM | -மயிலை மாதவன்

ADVERTISEMENT

இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் சந்திரசேகர ஆசாத்தும் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதர்க்கா என்ற ஊரில் இவர் பிறந்தார். முழுமையான சுதந்திரத்தை அடைய புரட்சிதான் சரியான தீர்வு என முடிவு செய்தார். பதினைந்து வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரேசேகரிடம் அவரின் தந்தை பெயர் முகவரி என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது அவர் தனது தந்தை பெயர் ஆசாத் என்றார். "ஆசாத்' என்றால் "விடுதலை' என்று பொருள். முகவரி என்று கேட்டதற்கு "சிறை' என்று பதில் கூறினார்.

"இவனை சிறையில் அடையுங்கள்' என நீதிபதி உத்தரவிட்ட உடனே சந்திரசேகர் "நான் இவ்வாறு கூறினால்தான் நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்' என்றுதான் கூறினேன் என்று கூற நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது. ஆத்திரமடைந்த நீதிபதி. "இவனுக்கு பதினைந்து பிரம்படி கொடுங்கள் என்றார். ஒவ்வொரு அடி விழும் போது "பாரத் மாதா கீ ஜே' என் முழங்கினார் அந்த வீர இளைஞர். பிறகு இவர் "சந்திரசேகர ஆசாத்' என்று அழைக்கப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT