பார்த்தே ஆக வேண்டிய பராக்பூர்

இமாசலப்பிரதேசத்தில் காங்கராஜில்லாவில் காங்கரா பள்ளத்தாக்கில் பராக்பூர் அமைந்துள்ளது. இது ஒரு பாரம்பரியம் மிக்க ஊர்.
பார்த்தே ஆக வேண்டிய பராக்பூர்

இமாசலப்பிரதேசத்தில் காங்கராஜில்லாவில் காங்கரா பள்ளத்தாக்கில் பராக்பூர் அமைந்துள்ளது. இது ஒரு பாரம்பரியம் மிக்க ஊர். இதனை அங்கீகரித்து இமாசலப் பிரதேசம் 1997-இல் பாரம்பரிய நகரம் என்ற அந்தஸ்தை இதற்கு வழங்கியுள்ளது.

 இங்கு என்ன சிறப்பு?

 ஒரு நகரத்தில் ஏராளமான வித்தியாசமான கட்டடங்கள் காணலாம்.

 ஒரு கிராமத்தில் காண இயலுமா? அதுவும் நாட்டின் எல்லையில் உள்ள இமாசல மாநிலத்தில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது என்றால் ஆச்சர்யம் தானே!
 குத்திலாசூட் என்பவர் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்திற்கு வந்து தங்கினார். அவர் ஒரு வியாபாரி. அதனால் பல இடங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று ஏராளமாய் சம்பாதித்தார்.

 அந்த சம்பாத்தியத்தை வைத்து உள்ளூரில் ஏராளமான நூதன கட்டடங்களை கட்டினார். இவை ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வேறுபடும்.

 காங்கரா, ராஜ்புத், பிரிட்டிஷ், போர்ச்சுகீசியர், இத்தாலி, சீனா என பல கட்டடக்கலையைக் கொண்ட கட்டடங்களையும் இங்கு காணலாம்.

 1864-ஆம் ஆண்டிலேயே இங்கு கிராம கமிட்டி கூடி கூரையை பராமரித்து வந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாரம்பரிய கட்டடங்கள், கிணறுகள், கால்வாய்கள், கோயில்கள் ஆகியவற்றை பார்க்கவே வந்து செல்கிறார்கள்.

 இங்கு தி ஜட்ஜஸ் கோர்ட் என ஒரு எடுப்பான கட்டடம் 12 ஏக்கரில் உள்ளது. சுற்றிலும் மாமரம் மற்றும் லிச்சி பழத்தோட்டங்களுடன் அமைந்துள்ளது. இதனுள் 30 அறைகள் உள்ளன. இவற்றின் உள்ளே அற்புத ஓவியங்களையும், கைவினைப் பொருட்கள், அலங்காரங்களையும் கண்டுகளிக்கலாம்.

 வசந்த காலத்தில் இந்த பகுதியில் பல வகைப்பூக்கள் பூத்து குலுங்கும். இந்த ஊரிலிருந்து 30 கி.மீ தொலைவில் இரு முக்கிய துர்க்கை கோயில்கள், சக்தி பீடங்கள் உள்ளன. 60 கி.மீ தொலைவில் தர்ம சாலா உள்ளது.

 பதான் கோட்டிலிருந்து 100 கிலோ மீட்டர். காங்கரா நகரில் தங்கிக் கொண்டு இவை அனைத்தையும் கண்டு களித்துவிடலாம்.

 சண்டிகர்... அமிர்தரஸிலிருந்தும் பராக்பூருக்கு எளிதில் வரலாம்!

 - ராஜிராதா, பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com