ஒளியின் சூட்சுமம்

"குலேபகாவலி', "ஜாக்பாட்' என இரு படங்களில் தனித்துவம் பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த்குமார்.
ஒளியின் சூட்சுமம்

"குலேபகாவலி', "ஜாக்பாட்' என இரு படங்களில் தனித்துவம் பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த்குமார்.
 ரவிவர்மனின் மாணவராக இருந்து சினிமா கற்றவர், தற்போது ஹிந்தி படமொன்றிலும் பணியாற்றி வருகிறார். "என் வீட்டில் நான் போலீசாக விரும்பினார்கள். ஆனால், சினிமா ஆர்வம் காரணமாக ராஜீவ் மேனன் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு கற்றுக் கொண்டேன். திரைக்கதைதான் முதல் சுவாரஸ்யம். அதைக் காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம்.
 ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். ஒளியின் சூட்சுமமே புரியாமல் இருப்பதுதான் இந்தத் தொழிலின் ரகசியம். இருள் என்பது குறைந்த ஒளி என்றார் பாரதி. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியைச் சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது நுட்பமான பயிற்சி. நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com